search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி கைது"

    துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

    சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மேலூர் கொட்ட நாதம்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவரிடம் கட்டக்காளைபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), அவரது மனைவி கங்காதேவி ஆகியோர் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி இருந்தனர்.

    வெகு நாட்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. எனவே சீனிவாசன் பணத்தை திருப்பிக்கேட்டபோது சரவணனும், கங்காதேவியும் மறுத்து விட்டனர்.

    இது தொடர்பாக சீனிவாசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து சரவணன், கங்காதேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    முசிறி அருகே வீரமணிப்பட்டியில் வீடுபுகுந்து பட்டபகலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 58 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முசிறி:

    முசிறி அடுத்த வீரமணிப்பட்டி கிராமத்தில் பார்த்தீபன் என்பவரது வீட்டில் பட்டபகலில்  பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண் லதா (34) திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்தீபன் பெண் ஒருவர் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    அப்போது அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் அந்தபெண் மூலம் தப்பிஓடிய வாலிபருக்கு போன் செய்து வரவழைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் அந்த பெண்ணின் கணவர் திருச்சியை சேர்ந்த ரெங்கநாதன் (30) என்பதும், அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. 

    மேலும் கணவன் மனைவி இருவரையும் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்ததில் இருவரும் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு சென்று பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடுவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முசிறி, துறையூர், தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் லதா மூலம் நகைகளை பல்வேறு இடங்களில் அடகு மற்றும் விற்கப்பட்டிருந்த 58 பவுன் நகைகளை போலீசார் மீட்டு, இருவரையும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கணவன்,மனைவி இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×